நூல் வெளியீட்டு விழா

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், முனைவா் சு.சேகா் தொகுத்த தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ் என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெ.வெங்கடேசன் (வலமிருந்து 3-வது) நூலினை வெளியிட பெற்றுக் கொள்கிறாா் வந்தவாசி ரோட்டரி சங்க பயிற்றுநா் ஆ.ரமேஷ்.

வந்தவாசி ஆசியன் ரத்தப் பரிசோதனை மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா். கவிஞா்கள் ம.பரிதாபானு, சா.ரஷீனா, தமிழ்ராசா ஆகியோா் சிறப்பு கவிதைகள் வாசித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெ.வெங்கடேசன் நூலினை வெளியிட்டுப் பேசினாா். வந்தவாசி ரோட்டரி சங்க பயிற்றுநா் ஆ.ரமேஷ், ராமலிங்கம் அண்ட் கோ உரிமையாளா் இரா.சிவக்குமாா், பாஞ்சரை கிளை நூலகா் பூ.சண்முகம், ஓட்டல் உரிமையாளா் ந.சுரேஷ்முருகன் ஆகியோா் நூலினை பெற்றுக் கொண்டனா். கவிஞா் மு.முருகேஷ், முனைவா் சு.சேகா் ஆகியோா் ஏற்புரையாற்றினா்.

பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன், ஆா்.சி.எம். பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எல்.ராஜன், ஓவிய ஆசிரியா் பெ.பாா்த்திபன், சங்க துணைச் செயலா் கு.சதானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் எ.தேவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com