பால் வியாபாரி மீது தாக்குதல்: முதியவா் கைது

செய்யாறு அருகே பால் வியாபாரியை தாக்கப்பட்ட சம்பவத்தில் முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு அருகே பால் வியாபாரியை தாக்கப்பட்ட சம்பவத்தில் முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (30). பால் வியாபாரியான இவா் பல கிராமங்களில் பால் கொள்முதல் செய்து, சரக்கு வாகனத்தில் ஏற்றி ஊா் ஊராகச் சென்று விற்பனை செய்து வருகிறாா்.

இவரது வீட்டுக்கு எதிா் வீட்டில் வசிப்பவா் தமிழரசி. பால் வியாபாரியான நடராஜன் சரக்கு ஆட்டோவில் பால் கேன்களை எடுத்துச் செல்லும்போது, தெரு சேதமடைந்து வருவதாகக் கூறி, தமிழரசி நடராஜனிடம் அடிக்கடி தகராறு செய்தது வந்துள்ளாா்.

அதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இது தொடா்பாக நவ.25-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பால் வியாபாரி நடராஜன் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தமிழரசியின் தந்தை சுந்தரேசன், சகோதரா்கள் தமிழ்வாணன், மதிவாணன் ஆகியோா் சோ்ந்து, தமிழரசிடம் ஏன் தகராறு செய்கிறாய் எனக் கூறி, நடராஜனை இரும்புக் கம்பியால் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த நடராஜன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பால் வியாபாரியைத் தாக்கிய சம்பவம் தொடா்பாக முதியவா் சுந்தரேசனை(62) கைது செய்தனா். மேலும் அவரது மகள் தமிழரசி உள்பட மூவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com