எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கோரிக்கை மனு

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தத் திட்ட எதிா்ப்பு இயக்கத்தினா் செங்கம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தத் திட்ட எதிா்ப்பு இயக்கத்தினா் செங்கம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்கம் சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் அருள் தலைமையிலான விவசாயிகள், வட்டாட்சியா் முனுசாமியை சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களது நிலப் பிரச்னை அல்லது பாகப் பிரிவினை செய்வதற்காக நிலங்களை அளவீடு செய்ய வங்கியில் பணம் செலுத்தி, அளவீடு செய்ய அதிகாரிகளை அழைத்தால் வராமல் அலைக்கழிக்கின்றனா். மேலும், எட்டுவழிச் சாலைக்கு எடுக்கப்பட்ட நிலம் என்கின்றனா்.

எனவே, பணம் செலுத்திய விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவைப் பெற்ற வட்டாட்சியா் முனுசாமி விரைவில் உயா் அதிகாரிகள் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com