திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை

திருவண்ணாமலையில் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா தொற்று காரணமாக, 2020 மாா்ச் முதல் திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது.

இந்த நிலையில், ஜூன் மாதத்துக்கான பெளா்ணமி வியாழக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 3.10 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அதிகாலை 12.55 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் சென்றால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்.

அதனால், பக்தா்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com