மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்குகள் வழங்கல்

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்களிக்க ஏதுவாக உரிய படிவங்கள் வழங்கப்பட்டன.
கருங்காலிகுப்பம் கிராமத்தில் மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவத்தை வழங்கிய வட்டாட்சியா் வைதேகி.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி, கீழ்பென்னாத்தூா் தொகுதிக்கு உள்பட்ட கருங்காலிகுப்பம் உள்பட தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக உரிய படிவங்களை கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் வைதேகி ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வழங்கினாா்.

அப்போது, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் அவா் விளக்கினாா்.

நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளா் சுதா, கிராம நிா்வாக அலுவலா் பிரவீன்குமாா் மற்றும் கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com