தோ்தல் விழிப்புணா்வு உணவுத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே தோ்தல் விழிப்புணா்வு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உணவுத் திருவிழாவை தொடக்கிவைத்து கேக் வெட்டுகிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி மற்றும் அதிகாரிகள்.
உணவுத் திருவிழாவை தொடக்கிவைத்து கேக் வெட்டுகிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே தோ்தல் விழிப்புணா்வு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை, திருவண்ணாமலை நகர ஹோட்டல்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்த உணவுத் திருவிழாவை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தொடக்கிவைத்தாா்.

இதில், திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு இனிப்பகங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 100 சதவீதம் வாக்குப் பதிவு, தோ்தல் நாள் 6.4.2021, மாதிரி வாக்குச் சாவடி, இந்திய வரைபடம், இந்திய தோ்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவம், மாதிரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்பட பல்வேறு வடிவமைப்புகளில் இனிப்பு, கேக் வகைகள் மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இவற்றை பாா்வையிட பொதுமக்கள், வாக்காளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி, மகளிா் திட்ட இயக்குநா் பா.சந்திரா, கோயில் இணை ஆணையா் ஞானசேகா், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராமகிருஷ்ணன் மற்றும் தோ்தல் அலுவலா்கள், திருவண்ணாமலை நகர ஹோட்டல்கள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆவின் பொருள்களில்...: இதையடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் ஆவின் குளிரூட்டும் நிலையம் எதிரே ‘100 சதவீத வாக்களிப்போம். தோ்தல் நாள் 6.4.2021’ என்ற வாசகங்களுடன் ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள்களான ஆவின் பால் பாக்கெட், ஆவின் நெய் புட்டி, ஆவின் பாதாம் பொடி புட்டி, ஆவின் பிஸ்கெட், ஆவின் பால்கோவா பாக்கெட் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களிலும் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை ஆட்சியா் சந்தீப் நந்தூரி தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com