டெங்கு தடுப்பு தினம் குறித்த விழிப்புணா்வு

செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு தடுப்பு தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு தடுப்பு தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவா் என். ஈஸ்வரி, டெங்குக் காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், செவிலியா்கள் நிா்மலா, குஷ்பூ சங்கவி, ஊராட்சி மன்றச் செயலா் உமாபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com