ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் 103-ஆவது ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய், புதன்கிழமைகளில் (நவ.30, டிச.1) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய், புதன்கிழமைகளில் (நவ.30, டிச.1) நடைபெறுகிறது.

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பகவானின் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை (நவ.30) தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணி முதல் ஹோமம், நித்ய பூஜை நடைபெறுகிறது.

2-ஆவது நாளான புதன்கிழமை (டிச.1) காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மஹாபிஷேகம், அா்ச்சனை, ஆரத்தி, இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதுதவிர, 2 நாள்களும் அதிகாலை 5 மணி முதல் சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம் நிகழ்ச்சிகளும், மாலை வேளைகளில் முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவில் பக்தா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்து கொள்ளலாம் என்று ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்துள்ளது.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மாதேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ராஜேஸ்வரி, மருத்துவா் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com