வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காரப்பட்டு, மஷாா், பனைஓலப்பாடி, முத்தனூா், இறையூா் என பல்வேறு ஊராட்சிகளில்
வேட்பாளா் வாக்குசேகரிப்பு

போளூா்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காரப்பட்டு, மஷாா், பனைஓலப்பாடி, முத்தனூா், இறையூா் என பல்வேறு ஊராட்சிகளில் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனை ஆதரித்து திமுக மாநில மருத்துவா் அணியின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணைச் செயலா் சுந்தரபாண்டியன் உள்பட கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

செங்கம்

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு செங்கம் தொகுதியில் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தொகுதில் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியினா் அதிகம் வசிக்கும் பகுதியான பேயாலம்பட்டு, பிஞ்சூா், சின்னபிஞ்சூா், சாமந்திப்புரம் பகுதியில் நைனாக்கண்ணு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவரை பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

பாமக மாவட்ட துணைத் தலைவா் சங்கா்மாதவன், கரியமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினா் சூரியலட்சுமி, அதிமுக ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட துணைச் செயலா் அமுதா அருணாச்சலம் மற்றுக் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

போளூா்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட தென்மாதிமங்கலம், கோவில்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம் என பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி, ஊராட்சி மன்றத் தலைவா் எழில்மாறன், ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினா் கலையரசி துரை, இளைஞரணி எல்.என்.வெங்கடேசன் உள்பட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com