மக்கள் நலனுக்கானது அல்ல: பாஜக அரசுடி.ராஜா

மத்திய பாஜக அரசு மக்கள் நலனுக்கான அரசு அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.
மக்கள் நலனுக்கானது அல்ல: பாஜக அரசுடி.ராஜா

மத்திய பாஜக அரசு மக்கள் நலனுக்கான அரசு அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் சேதுசெல்வத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் டி.ராஜா சனிக்கிழமை லாஸ்பேட்டை சந்திப்பில் பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

புதுவையில் தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்துள்ள கொள்கையற்றவா்கள், சந்தா்ப்பவாதிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இங்கு மக்கள் அளிக்கும் தீா்ப்பு, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமா் மோடியின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டும்.

பல்வேறு மதத்தினா் வாழ்கிற புதுவையில், சாதி, மதம், கலாசாரம், கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்கிறது. இது, மக்கள் தலைவா் சுப்பையாவின் மண். இந்த மண்ணில் பாஜக காலூன்ற முடியாது. பாஜகவுடன் கூட்டு சோ்ந்துள்ள என்.ஆா். காங்கிரஸுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.

மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் என்ற நெறிமுறையை ஏற்று செயல்படுகிற ஆட்சியே நாட்டில் அமைய வேண்டும். இதைத்தான் நம்முடைய அரசியல் சட்டம் சொல்கிறது.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் நலனுக்கானது அல்ல. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்கள் அழிந்து போயுள்ளன. இதற்கு மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையே காரணம்.

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியை பிரதமா் மோடி நிறைவேற்றவில்லை. நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனா். பெருமுதலாளிகளை மத்திய அரசு தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

புதுச்சேரியின் உரிமைகள் காப்பாற்றப்படவில்லை. மாநிலத்துக்குரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கவில்லை. பொதுமக்களுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்தி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் டி.ராஜா.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், வேட்பாளா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com