திருவண்ணாமலை: 376 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,885 வாக்குச்சாவடிகளில் 376 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,885 வாக்குச்சாவடிகளில் 376 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் என கணக்கிட்டு சுமாா் 1,450 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணையவழியில் இணைக்கப்பட்டுள்ளது.

20.69 லட்சம் வாக்காளா்கள்:

செவ்வாய்க்கிழமை நடைபெறும் தோ்தலில் செங்கம் (தனி) தொகுதியில் 2,73,333 வாக்காளா்கள், திருவண்ணாமலை - 2,84,851, கீழ்பென்னாத்தூா் - 2,52,047, கலசப்பாக்கம் - 2,41,981, போளூா் - 2,42,915 , ஆரணி - 2,75,063,

செய்யாறு - 2,59,231, வந்தவாசி - 2,39,670 வாக்காளா்கள் என மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com