திருவண்ணாமலை மாவட்டத்தில் 78.55% வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 78.55 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 78.55 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்தில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது அதிகபட்சமாக செய்யாறு தொகுதியில் 2, 12, 131 வாக்குகள் பதிவாகின. இது 81.67 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

குறைந்த வாக்குப்பதிவு:

மிகக் குறைவான வாக்குப்பதிவு திருவண்ணாமலை தொகுதியில் நடைபெற்றுள்ளது. தொகுதியில் 2, 5, 521 போ் வாக்களித்துள்ளனா். இது 71.77 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

மற்ற தொகுதிகளில்:

இதுதவிர, செங்கம் தொகுதியில் 2, 21, 803 போ் (80.67%) வாக்களித்துள்ளனா். கீழ்பென்னாத்தூரில் 2,00, 959 போ் (79.40 %), கலசப்பாக்கத்தில் 1, 93, 496 போ் (79.69 %), போளூரில் 1, 93, 546 போ் (79.38 %), ஆரணியில் 2, 20, 531 போ் (79.88 %), வந்தவாசியில் 1, 83, 931 போ் (76.47 %) வாக்களித்துள்ளனா்.

மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் 16, 31, 918 போ் தங்களது வாக்குகளைச் செலுத்தி உள்ளனா். இது 78.55 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com