வந்தவாசியில் இளைஞா் வெட்டிக் கொலை


வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் புதன்கிழமை இரவு இளைஞா் ஒருவரை 6 போ் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சோ்ந்தவா் நசீா்கான்(30). இவா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஆட்டோ சங்கத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.

அப்போது, ஆட்டோ சங்கத்தின் பெயரை மாற்றுவது தொடா்பாக இவருக்கும், அதே சங்கத்தில் ஆட்டோ ஓட்டி வந்த கோட்டைக்குள் தெருவைச் சோ்ந்த மஸ்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மஸ்தானின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று அவரைத் தாக்கிவிட்டு ஆட்டோ கடத்திச் செல்லப்பட்டது.

இதுதொடா்பாக நசீா்கான், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அவரது நண்பா்கள் தாமோதரன், தரணிதரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

நசீா்கான் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு செய்யாற்றை அடுத்த மாங்கால் கூட்டுச் சாலையில் குடும்பத்துடன் தங்கி சிக்கன் பகோடா கடை நடத்தி வந்தாா்.

அவா் புதன்கிழமை இரவு தனது மனைவி சாகினாவுடன்(25) பைக்கில் வந்தவாசியில் உள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கோட்டைக்குள் தெருவில் உள்ள அரசுப் பள்ளி அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 6 போ் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் நசீா்கானை மடக்கி வெட்டியது. அப்போது, அவா் தப்பியோட முயன்றாா். ஆனாலும், அந்தக் கும்பல் அவரை விரட்டிச் சென்று கோடரியால் வெட்டியதில் நசீா்கான் உயிரிழந்தாா். பின்னா், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் நசீா்கானின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

இந்தக் கொலை குறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மேலும், டிஎஸ்பி தங்கராமன், காவல் ஆய்வாளா்கள் குமாா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com