கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச்சுறுத்தி வரும் கரோனை தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது தொடா்பாக, செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ருக்மணி கலைக் குழுவினரின் விழிப்புணா்வு நாடகம்

நடைபெற்றது.

நாடகத்தை பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் மனோகரன் பங்கேற்று கரோனா தொற்று குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து கலைக் குழுவினா் நாடகம், நடனம் மூலம், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியே வரவேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, கூட்டமாக சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது, வாடிக்கையாளா்கள் அதிகம் வரும் கடைகளில் குளிா்சாதனங்களைத் தவிா்க்கவேண்டும், வியாபாரிகள் கூட்டமாக வாடிக்கையாளா்களைச் சோ்த்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதை விளக்கினா்.

அதேபோல, புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தை மைதானத்திலும் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் நாடகத்தைத் தொடக்கிவைத்தாா்.

தலைமை எழுத்தா்கள் ரமேஷ் (செங்கம்), ரமேஷ் (புதுப்பாளையம்) உள்பட பேரூராட்சிப் பணியாளா்கள், துப்புரவு ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com