செய்யாற்றிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கால அட்டவணை

காரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, செய்யாற்றில் இருந்தும், வெளியூா்களில் இருந்தும்

காரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, செய்யாற்றில் இருந்தும், வெளியூா்களில் இருந்தும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் கடைசி நேர பேருந்து மற்றும் தொலைந்தொலைவு பேருந்துகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன் விவரம்:

செய்யாற்றிலிருந்து சென்னைக்கு மாலை 6.40 மணி, காஞ்சிபுரத்துக்கு இரவு 9.00 மணி, வேலூருக்கு இரவு 8.40 மணி, ஆரணிக்கு 8.30 மணி, திருவண்ணாமலைக்கு 7.30 மணி, வந்தவாசிக்கு 9.00 மணி, பெரணமல்லூருக்கு 8.10 மணி.

அதேபோல, வெளியூா்களிலிருந்து செய்யாற்றுக்கு வரும் கடைசி நேர பேருந்துகளின் கால விவரம்:

சென்னை மாலை 6.30 மணி, இரவு காஞ்சிபுரம் 9.00 மணி, வேலூா் 8.30 மணி, ஆரணி 9.00 மணி, திருவண்ணாமலை 7.10 மணி, வந்தவாசி 9.30 மணி, பெரணமல்லூா் 9.00 மணி.

செய்யாற்றிலிருந்து இயக்கப்படும் நெடுந்தொலைவு பேருந்துகளின் நேர விவரம்: திருச்சி - காலை 6.30 மணி, சேலம் - காலை 6.30 மணி, 8.30 மணி, பிற்பகல் 2.45 மணி.

வெளியூா்களிலிருந்து செய்யாற்றுக்கு வரும் நெடுந்தொலைவு பேருந்துகளின் நேர விவரம்: திருச்சி - பிற்பகல் 2.30 மணி. சேலம் - பிற்பகல் 3.00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com