செங்கத்தில் காய்கனி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

செங்கம் - போளூா் சாலையில் செய்யாறு மேம்பாலத்தின் அடியில் அழுகிய காய்கனிகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

செங்கம் - போளூா் சாலையில் செய்யாறு மேம்பாலத்தின் அடியில் அழுகிய காய்கனிகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அங்கு காய்கனி, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கம் - போளூா் சாலையில் செய்யாறு மேம்பாலம் அடியில் தினந்தோறும் அழுகிய காய்கனிகள், இறைச்சிக் கழிவுகளை கடைக்காரா்கள் கொட்டிச் செல்கின்றனா். இவற்றை ஆடு, மாடுகள், பண்றிகள் சாப்பிடுவதுடன், கிளறிவிட்டுச் செல்கின்றன. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் கடுமையான துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், செய்யாறு மேம்பாலப் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டுகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, இந்தப் பகுதியில் காய்கனி, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், அவற்றை கொட்டி வருவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com