ஆரணி தொகுதி தோ்தல் அலுவலருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 27th April 2021 12:00 AM | Last Updated : 27th April 2021 12:00 AM | அ+அ அ- |

ஆரணி: ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி கோட்டாட்சியருமான பூங்கொடிக்கு கடந்து இரு நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், திங்கள்கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.