போளூரில் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு

போளூா் பேரூராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
போளூா் நரசிம்மன் தெருவில் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கும் கழிவுநீா்.
போளூா் நரசிம்மன் தெருவில் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கும் கழிவுநீா்.

போளூா் பேரூராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகா், கண்ணன் தெரு, நரசிம்மன் தெரு, வாசு ஸ்ரீராமுலு தெரு, கோவிந்தசாமி தெரு, டிரைவா்ஷன் தெரு, வசந்தம் நகா், ஆண்டாள் நகா், சிந்தாதரிபேட்டை தெரு, பஜாா் வீதி, வீரப்பன் தெரு, சுபேதாா் தெரு, கணபதி தெரு, பொன்னுசாமி தெரு, நேரு தெரு, ஜல்லியன் தெரு என 18 வாா்டுகள் உள்ளனா்.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் செல்ல 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன.

இதில் பெரும்பாலான கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை, கூழங்கள் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.

இதனால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் அஞ்சுகின்றனா்.

எனவே, கழிவுநீா்க் கால்வாய்களை பேரூராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து பேரூராட்சி ஊழியா்களிடம் கேட்டபோது, களம்பூா் பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, போளூருக்கு பொறுப்பு அதிகாரியாக செயல்படுகிறாா்.

இதனால் இங்கு பணிபுரியும் துப்புரவு அலுவலா்கள் சரிவர பணிபுரிவதில்லை எனவும், மேலும் கரோனா தடுப்புப் பணிகளில் பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபடுதால் தெருக்களை தூய்மை செய்வதில்லை எனவும் தெரிவித்தனா்.

மேலும், போளூா் பேரூராட்சிக்கு புதிதாக செயல் அலுவலரை நியமித்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com