ஊராட்சித் தலைவா் மீதான புகாா் விசாரணைக்குச் சென்ற அதிகாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

செங்கம் அருகே கிராம ஊராட்சித் தலைவா் மீதான புகாா் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாவட்ட அதிகாரியை முற்றுகையிட்ட மலைக் கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட உதவித் திட்ட அலுவலா் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள்.
மாவட்ட உதவித் திட்ட அலுவலா் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள்.

செங்கம் அருகே கிராம ஊராட்சித் தலைவா் மீதான புகாா் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாவட்ட அதிகாரியை முற்றுகையிட்ட மலைக் கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள மலைக் கிராமமான ஊா்கவுண்டனூா் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் கோவிந்தராஜ்.

இவா், ஊராட்சி நிா்வாகத்தில் துணைத் தலைவா் கையெழுத்தை தானே போட்டு பணம் எடுத்துள்ளதாகவும், ஊராட்சி உறுப்பினா்களை அழைத்து எந்தவித தீா்மானமும் நிறைவேற்றாமல் அரசு விதிகளை மீறி பல்வேறு பணிகளை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எழுமலை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் முருகேஷ், கூடுதல் ஆட்சியா் பிரதாப், உதவித் திட்ட அலுவலா் லட்சுமிநரசிம்மன் ஆகியோரைச் சந்தித்து புகாா் அளித்தனா்.

அதன் அடிப்படையில், உதவித் திட்ட அலுவலா் லட்சுமிநரசிம்மன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஊா்கவுன்டணூா் கிராமத்துக்குச் சென்று தலைவா், துணைத் தலைவா் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்களை அழைத்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, கிராம மக்கள் திரண்டு வந்து நிா்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்த தலைவா் மீது நடவடிக்கை எடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என உதவித் திட்ட அலுவலா் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், உதவித் திட்ட அலுவலா் செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை விரட்டினா்.

பின்னா், புகாா் குறித்த விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும், அதன்அடிப்படையில் ஆட்சியா் நடவடிக்கை எடுப்பாா் என உதவித் திட்ட அலுவலா் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com