முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
மனித உரிமைகள் தினம்
By DIN | Published On : 10th December 2021 09:59 PM | Last Updated : 10th December 2021 09:59 PM | அ+அ அ- |

மனித உரிமைகள் தினத்தையொட்டி, போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகம் தலைமையில், வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மண்டலத் துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
சிறப்பு பட்டா மாற்ற முகாம்: போளூா் வட்டம், திருசூா் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்ற முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிஉதவித் தொகை, நில உள்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா மாற்றம் உள்பட 54 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், வீடு, நில உள்பிரிவு என 6 பேருக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.