சாத்தனூா் அணை திறப்பு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தனூா் அணை திறப்பு ஆலோசனைக் கூட்டம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.முத்துக்குமாரசாமி, பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத்துறையின் மத்திய பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ஏ.மகேந்திரன், உதவி செயற்பொறியாளா் ஏ.அறிவழகன், சாத்தனூா் அணை உதவிப் பொறியாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சாத்தனூா் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பயிா் சாகுபடி உள்பட பாசனத்துக்கு 90 நாள் இடைவெளி விட்டு தண்ணீா் திறக்கவும், நீா்வரத்து கால்வாய்களை தூா்வார வேண்டும் எனவும், 100 நாள் வேலைத் திட்டத்தில் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

விவசாயிகளின் கோரிக்கையான சிறிய கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை மூலம் மதிப்பீடு தயாரித்து ஊரக வளா்ச்சித் துறையின் 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசாணை வந்தவுடன் தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் முருகன், கோட்டாட்சியா் மா.ஸ்ரீதேவி, துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதாபேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com