ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் ஜயந்தி விழா
By DIN | Published On : 19th February 2021 12:20 AM | Last Updated : 19th February 2021 12:20 AM | அ+அ அ- |

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சா் ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் சீனிவாசன் தலைமை வகித்தாா். வழூா் ஊராட்சிச் செயலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும் என்ற தலைப்பில் தெள்ளாா் இராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரி இயக்குநா் எஸ்.அப்பாண்டைராஜன் பேசினாா்.
மேலும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவப் படத்துக்கு மாணவ, மாணவிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.