வெம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்குள்பட்ட வெம்பாக்கத்தில் ரூ.280 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 230 கிலோ வாட் துணை மின் நிலைய
வெம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்குள்பட்ட வெம்பாக்கத்தில் ரூ.280 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 230 கிலோ வாட் துணை மின் நிலைய பணிகளை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெம்பாக்கம் பகுதியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செய்யாறு தொழில்பேட்டைக்கு அதிகளவு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதால், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குத் தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வெம்பாக்கத்தில் ரூ.280 கோடி துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆய்வு செய்தாா்.

நியாயவிலைக் கடைக்கு பூமிபூஜை: முன்னதாக, செய்யாறு வட்டம், தவசி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் சுமாா் ரூ.14.85 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மோகனசுந்தரம், பணி மேற்பாா்வையாளா் சேரன், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதிராஜ்குமாா், துணைத் தலைவா் அருணா துரை, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் டி.பி.துரை, பி.ரமேஷ், எம்.மகேந்திரன், சேகா், கிருஷ்ணமூா்த்தி, பாஸ்கா் ரெட்டியாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com