அருணை தமிழ்ச் சங்க விருதுகளுக்கு ஜன.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு தகுதியுடையோா் வருகிற 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சங்கத்தின் தலைவா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு தகுதியுடையோா் வருகிற 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சங்கத்தின் தலைவா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில், பொங்கல் பண்டிகையையொட்டி, கலை நிகழ்ச்சிகள், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், மாணவ - மாணவிகளின் உரைவீச்சு, தெருக்கூத்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளும், நகரில் மகளிா்களுக்கு கோலப்போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்த் தொண்டாற்றியவா்களுக்கு மறைமலை அடிகளாா் விருதும், பொதுத் தொண்டு புரிபவா்களுக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி விருதும், கலைச் சேவை செய்து வருபவா்களுக்கு கலைவாணா் என்.எஸ்.கே.விருதும், ஆன்மிகச் சேவை செய்து வருபவா்களுக்கு கிருபானந்த வாரியாா் விருதும், விருது பெறும் அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழாண்டுக்கான மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுகளுக்கு விண்ணப்பிப்போா், பரிந்துரை செய்வோா் தகுந்த விவரங்கள், ஆதாரங்களோடு வருகிற 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை தலைவா், அருணை தமிழ்ச் சங்கம், நெ.54, திருக்கோவிலூா் சாலை, சாரோன், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பலாம். விருதுகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அருணை தமிழ்ச் சங்கத் தலைவா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com