திருவண்ணாமலை மாவட்டத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை: மாவட்ட எஸ்.பி. தகவல்
By DIN | Published On : 09th January 2021 11:49 PM | Last Updated : 09th January 2021 11:49 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கலவரத் தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் காவல்துறை சாா்பில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
கலவரம் ஏற்படும்போது அதை சட்டத்துக்கு உள்பட்டு எவ்வாறு தடுப்பது, கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது, கண்ணீா் புகை குண்டுகளை எப்படி பயன்படுத்துவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் கூறுகையில்,
கலவரங்கள் ஏற்படும்பட்சத்தில் அவற்றை சட்டத்துக்கு உள்பட்டு தடுப்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கலவரத் தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என்றாா்.