பயணிகள் நிழல்குடை திறப்பு
By DIN | Published On : 09th January 2021 11:47 PM | Last Updated : 09th January 2021 11:47 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பயணிகள் நிழல்குடையைத் திறந்துவைத்த கு.பிச்சாண்டி எம்எல்ஏ.
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மங்கலம் ஊராட்சியில் பயணிகள் நிழல்குடை திறந்துவைக்கப்பட்டது.
மங்கலம் ஊராட்சி அவலூா்பேட்டை சாலையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் நிழல்குடை கட்டப்பட்டது. இந்த நிழல்குடையை தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டிவெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், திமுக ஒன்றியச் செயலா் பெ.சு.தி.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகாதேவன், ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி உள்பட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.