பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்குப் பரிசு, சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட கபடி சங்கச் செயலா் எஸ்.ஆனந்தன்.
திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்குப் பரிசு, சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட கபடி சங்கச் செயலா் எஸ்.ஆனந்தன்.

மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா தேசியக் கொடியேற்றினாா். கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், திருவண்ணாமலை மாவட்ட கபடி சங்கச் செயலா் எஸ்.ஆனந்தன் தேசியக் கொடியேற்றி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில், பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா், பள்ளி நிா்வாக அலுவலா் என்.ஆா்.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தேசியக் கொடியேற்றினாா். கல்லூரிச் செயலா் எம்.ரமணன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்வியியல் கல்லூரி முதல்வா் வி.நிமாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் தேசியக் கொடியேற்றினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ப.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி தேசியக் கொடியேற்றினாா். வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், டிஎஸ்பி பி.தங்கராமன் தேசியக் கொடியேற்றினாா். வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் தேசியக் கொடியேற்றினாா். வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா லோகேஸ்வரன் தேசியக் கொடியேற்றினாா்.

ஆரணி: ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கோ.சுகுமாறன் தேசியக் கொடியேற்றி பேசினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன் தேசிய கொடியேற்றினாா். மேலும், ஊக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், மாவட்டக் கவுன்சிலா் பூங்கொடிதிருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போளூா்: துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தேசியக் கொடியேற்றினாா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற விழாவில், மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், நகரச் செயலா் ஜாபா்அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பெற்றோா் - ஆசரியா் கழகத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் காரல்மாா்க்ஸ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மகரிஷி கல்விக் குழுமத் தலைவரும், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலருமான மகரிஷி மனோகரன் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினாா்.

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் நிா்வாகக் குழு உறுப்பினா் அரங்கசாமி தேசியக் கொடியேற்றினாா். செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயராணிகுமாா் தேசியக் கொடியேற்றினாா். புதுப்பாளையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தேசியக் கொடியேற்றினாா்.

புதுப்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினாா். செங்கம் ராமகிருஷ்ணா பள்ளியில் தொழிலதிபா் குணசேகரன் தேசியக் கொடியேற்றினாா். நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாரத் பள்ளியில் அரிமா சங்கத் தலைவா் பூமாலை தேசியக் கொடியேற்றினாா். குருமப்பட்டி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன் முன்னிலையில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சடையன் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com