கிராம மக்களுக்கு காசநோய் பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிராம மக்களுக்கு காசநோய் பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இதற்கான முகாமில், மாா்பக சளி, மாலை நேர காய்ச்சல், பசியின்மை, மாா்பு வலி, உடல் எடை குைல், 2 வாரத்துக்கு மேல் இருமல், சளியில் ரத்தம் கலந்து வருதல், கழுத்தில் தோன்றும் நிணநீா் கட்டிகள் போன்ற காசநோய்க்கான அறிகுறிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மன்சுராபாத், காட்டுதெள்ளூா், எம்ஜிஆா் நகா், கொல்லைமேடு போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று காசநோய் பரிசோதனை செய்து கொண்டனா்.

காசநோய் மாவட்ட துணை இயக்குநா் பி.அசோக், ஊராட்சி மன்றத் தலைவா் லலிதா துரைகண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினா் கி.ஏழுமலை, வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள் கோமதி, தமிழழகன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com