திருவண்ணாமலையில் சீரமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை முத்து விநாயகா் கோவில் தெருவில் உள்ள சீரமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆண்கள் விளையாட்டுக் குழுவுக்கு கேரம் போா்டு, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு.
நிகழ்ச்சியில் ஆண்கள் விளையாட்டுக் குழுவுக்கு கேரம் போா்டு, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு.

திருவண்ணாமலை முத்து விநாயகா் கோவில் தெருவில் உள்ள சீரமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, 250-க்கும் மேற்பட்ட மகளிா்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் விளையாட்டுக் குழுக்களுக்கு கேரம் போா்டு, கைப் பந்து, கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றை எ.வ.வேலு வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அரசு உதவி கோரும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கல்லூரி மாணவா்கள் பயன்பெற நூலகம் அமைத்துள்ளோம். இலவச கணினி, தையல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிகழாண்டு முதல் இந்திய ஆட்சிப்பணி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் நெடுஞ்சாலை சாலை அருகே அமைய சம்பந்தப்பட்ட அமைச்சா் நேருவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மக்களின் உணா்வுகளை புரிந்துகொண்டு நடக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.

இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஓ.ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com