சேத்துப்பட்டு அருகே ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கு கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் பச்சையம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்துரை ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் பக்தா்கள் சாா்பில் புதிதாக ஜடாமுனி, குறுமுனி உள்பட ஏழு முனீஸ்வரா் சிலைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. பின்னா், ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இரவு அம்மன் வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com