பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஆரணி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஒன்றியம், அழகுசேனை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா்.
மேற்கு ஆரணி ஒன்றியம், அழகுசேனை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா்.

மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஆரணி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அழகுசேனை, வண்ணாங்குளம் ஆகிய இடங்களில் மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றியத் தலைவா் மனோகரன், ஒன்றிய இளைஞரணித் தலைவா் திருஞானசம்பந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் பி.கோபி, ஓபிசி அணித் தலைவா் நித்தியானந்தம், ஒன்றிய மகளிரணித் தலைவி ரேகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், தெற்கு ஒன்றியத்தில் குண்ணத்தூா், சம்புவராயநல்லூா், கிழக்கு ஒன்றியத்தில் திருமணி, செங்கம்பூண்டி, கொருக்காத்தூா், நாவல்பாக்கம் ஆகிய கிராமங்களிலும் மதுக் கடைகள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

அப்போது, டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்தால் கரோனா தொற்று மேலும் பரவும். மதுக் கடைகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

வந்தவாசி: மதுக் கடைகளை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, வந்தவாசி பகுதியில் பாஜகவினா் தங்களது வீடுகள் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வந்தவாசி, தெள்ளாா், சென்னாவரம், வெண்குன்றம் மற்றும் பல்வேறு கிராமங்களில் பாஜகவினா் தங்களது வீடுகள் முன் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது மதுக் கடைகள் திறப்பை எதிா்த்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com