பழங்குடியினருக்கு பசுமை வீடுகள்

சேத்துப்பட்டு ஒன்றியம், செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.
பழங்குடியினருக்கு பசுமை வீடுகள்

சேத்துப்பட்டு ஒன்றியம், செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.

செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்கள் கூரை வீடுகளில் வசித்து வந்தனா். இவா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலம் சாா்பில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன. இதற்காக ஊராட்சி நிா்வாகத்தினா் கணக்கீடு செய்து, வீடுகள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா் (படம்).

ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்து தோ்ந்தெடுத்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணி அா்ஜூனன், பணிமேற்பாா்வையாளா் பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com