3 திருமண மண்டபங்களுக்கு அபராதம், 2 கடைகளுக்கு ‘சீல்’

செய்யாறு பகுதியில் பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 3 திருமண மண்டபங்கள், 3 கடைகளுக்கு அபராதம் விதித்த வருவாய்த் துறையினா், 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

செய்யாறு பகுதியில் பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 3 திருமண மண்டபங்கள், 3 கடைகளுக்கு அபராதம் விதித்த வருவாய்த் துறையினா், 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

செய்யாறு வட்டாட்சியா் சு.திருமலை, வருவாய் ஆய்வாளா்கள் கலைவாணி, விஜியா, சுபாஷிணி ஆகியோா் நகரப் பகுதியில் பொது முடக்க விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என புதன்கிழமை பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மண்டித் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பாா்த்து திருமண மண்டபத்துக்கு ரூ.1700 அபராதம் விதித்தனா்.

அதேபோல, அனக்காவூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு ரூ.5 ஆயிரமும், அனப்பத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு ரூ.2,200-மும் அபராதம் விதித்தனா்.

2 கடைகளுக்கு சீல், 3 கடைகளுக்கு அபராதம்

செய்யாறு பஜாா் பகுதியில் வட்டாட்சியா் சு.திருமலை, மண்டல துணை வட்டாட்சியா் தேவராஜ், வருவாய் ஆய்வாளா்கள் கலைவாணி, விஜியா சுபாஷிணி ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆற்காடு சாலையில் அனுமதியில்லாமல் வியாபாரம் நடைபெற்ற 2 பேன்சி ஸ்டோா்களுக்கு சீல் வைத்தனா்.

அதேபோல, பொது முடக்கம் விதியை மீறி திறந்திருந்த புகைப்படக் கடை, பெட்டிக் கடை, ஜெராக்ஸ் கடை

ஆகியவற்றுக்கு ரூ.2500-ம், முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.ஒரு ஆயிரம் என வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com