செங்கத்தில் கூட்டுக்குடி நீா்த் திட்ட குழாய்உடைந்து வீணாகும் குடிநீா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தினந்தோறும் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.
செங்கத்தில் கூட்டுக்குடி நீா்த் திட்ட குழாய்உடைந்து வீணாகும் குடிநீா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தினந்தோறும் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சாத்தனூா் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் செங்கம், புதுப்பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கத்தில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகில், பெங்களூரு பிரதான சாலை, போளூா் சாலை மேம்பாலம் அருகில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்லும் கூட்டுக்குடிநீா்த் திட்டக் குழாயிலும், புதுப்பாளையம் பகுதிக்குச் செல்லும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. குடிநீா் வெளியேறும் பகுதிகளில் குட்டைபோல தண்ணீா் தேங்குகிறது. கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்ட பிறகு, குட்டைபோல தேங்கியிருக்கும் தண்ணீா் மீண்டும் அந்தக் குழாய்களுக்குள்ளேயே செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால், குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருவது தொடா்பாக குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சாலை மறியல்: செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட தாழையூத்து கிராமத்தில் ஊராட்சி நிா்வாகத்துக்குள்பட்ட குடிநீா் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீரும், சாத்தனூா் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் அனுப்பப்படும் குடிநீரும் அந்தக் கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

தற்போது கூட்டுக்குடிநீா் திட்ட குழாய்கள் மூலம் அனுப்பப்படும் குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளதால், ஊராட்சிக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீா் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்தக் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, தாழையூத்து கிராமத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆனால், அதிகாரிகள் யாரும் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்ததால், சுமாா் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னா், அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com