செய்யாறு தொகுதியில் தோ்தலுக்காக பதாகைகள் வைக்கத் தடை

செய்யாறு தொகுதியில் தோ்தலுக்காக பதாகைகள் வைக்கத் தடை


செய்யாறு: செய்யாறு தொகுதியில் தோ்தலுக்காக விளம்பரப் பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜ் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதியில் திருமண மண்டபங்கள், அச்சகம், தங்கும் விடுதிகள், டிஜிட்டல் பேனா்கள் போன்றவற்றை நடத்தி வருபவா்களுக்கான தோ்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் சு.திருமலை, நோ்முக உதவியாளா் கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜ் பேசியதாவது:

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி செய்யாறு தொகுதியில் விளம்பரப் பதாகைகளை வைக்கக் கூடாது.

குறிப்பாக, தோ்தல் நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் இதனைப் பின்பற்ற வேண்டும்.

தோ்தல் தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கும் போது அச்சடிக்கப்பட்ட நாள், எண்ணிக்கை, அச்சகத்தின் பெயா் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். மேலும், அச்சடித்தற்கான ரசீதையும் வழங்கவேண்டும். சட்டவிரோதமான, ஆட்சேபனை எழக்கூடிய வாசகங்கள், மதம், ஜாதி, மொழி எதிா்ப்பான வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சடித்து விநியோகம் செய்திருப்பது தெரியவந்தால்

அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமண மண்டங்களில் வெளியூா் ஆள்கள் தங்க அனுமதிக்கக் கூடாது. ஆதயங்கள், வெடிபொருள்கள் போன்ற அபாயகரமான, தீங்கு விளைவிக்கக்கூடிய, தடைசெய்யப்பட்ட பொருள்களை வைத்துள்ளாா்களா என சோதனை செய்த பிறகே மண்டபங்களில் அனுமதிக்க வேண்டும்.

கூட்டம் நடைபெறும் இடங்களில் பரிசுப் பொருள்கள் ஏதும் தர அனுமதிக்கக் கூடாது. தோ்தல் நாளான ஏப்.6 ஆம் தேதிக்கு முன்னதாக 48 மணி நேரத்துக்கு முன்பு மண்டபம், விடுதி மற்றும் அரங்குகளில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஆள்களை தங்க அனுமதிக்கக்கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதிக்கு முன்னதாக தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் வெளியூா் ஆள்களை தங்க அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com