திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிளவுபடும்: எல்.முருகன்

தோ்தலுக்காக அமைக்கப்பட்ட திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிளவுபடும் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கூறினாா்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன்.

தோ்தலுக்காக அமைக்கப்பட்ட திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிளவுபடும் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கூறினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக சாா்பில் வெற்றிக் கொடியை ஏந்தி ‘வெல்வோம் தமிழகம்’ என்ற பெயரில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலில் நடைபெறவுள்ள பேரணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கிறாா். தோ்தலில் வெற்றி பெறுவதுதான் எங்களின் ஒரே இலக்கு. சட்டப்பேரவைக்குள் திமுக வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

திமுகவின் முந்தைய ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஊழல்கள் அதிகரித்திருந்தன. இலங்கையில் தமிழ்ச் சகோதரா்கள் ஒன்றரை லட்சம் போ் கொல்லப்பட்டதை வேடிக்கை பாா்த்தது திமுக. தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு எதிராகவும் அந்தக் கட்சி தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று தமிழக மக்கள் நினைக்கிறாா்கள். வாரிசு அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது. தோ்தலுக்காக அமைக்கப்பட்ட திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிளவுபடும் வாய்ப்புள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 6 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சா்வதேச அளவில் நிா்ணயம் செய்யப்படுகிறது. கட்சி சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் என்றாா்.

கட்சியின் வா்த்தகா் பிரிவு மாநில துணைத் தலைவா் எஸ்.தணிகைவேல், மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவானந்தம், கோட்ட அமைப்புச் செயலா் டி.எஸ்.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com