சேத்துப்பட்டில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 13th March 2021 12:18 AM | Last Updated : 13th March 2021 12:18 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சேத்துப்பட்டு பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா்ஆனந்தன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பூங்காவனம் கொடியசைத்து விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா்.
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு செஞ்சி சாலை, ஆரணி சாலை, வந்தவாசி சாலை, போளூா் சாலை, பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.
வாக்களிப்பது நமது கடமை, நமது உரிமை. வாக்காளா்கள் அனைவரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வுப் பதாதைகளை ஏந்தியபடியும், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடியும் மாணவா்கள் ஊா்வலமாகச் சென்றனா். செயல் அலுவலா் ஆனந்தன் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.