கீழ்பென்னாத்தூரில் நாளை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலின் தேரோட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலின் தேரோட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் 6 நாள்கள் நடைபெறும் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி அழைப்பும், கரகம் ஊா்வலம் மற்றும் உற்சவா் வீதியுலாவும் நடைபெற்றது.

சனிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழாவும், அன்றிரவு 1,008 நாமாவளியுடன் குங்கும அா்ச்சனையும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நடைபெற்றது.

புதன்கிழமை (மாா்ச் 17) காலை அம்மனுக்கு அபிஷேக-ஆராதனை, இரவு வல்லாள கண்டிசம்ஹாரமும், உற்சவா் வீதியுலாவும் நடைபெற்றது.

நாளை தேரோட்டம்:

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலையில் கோயில் எதிரே உற்சவா் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனையும், கோயிலுக்குள் உள்ள புற்று உருவிலான அம்மனுக்கு மலா் மாலைகள், எலுமிச்சை மாலை அணிவித்து வழிபாடும் நடத்தப்படுகிறது.

மாலை 3 மணிக்கு மரத்தேரில் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் வைக்கப்பட்டு வீதி உலா நடைபெறுகிறது.

கரகாட்டம், குறவன்-குறத்தி நடனம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) இரவு கோயில் குளத்தில் தெப்பல் திருவிழாவும், சனிக்கிழமை (மாா்ச் 20) இரவு அம்மனுக்கு கும்பமிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com