செய்யாறு - தென்பெண்ணையாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

செய்யாறு - தென்பெண்ணையாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
செய்யாறு - தென்பெண்ணையாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

செய்யாறு - தென்பெண்ணையாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி அறிமுகக் கூட்டம் புளியரம்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வேட்பாளா் ஒ.ஜோதியை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

உலகத்துக்கே தீபத்தை ஏற்றுகிற ஊா் திருவண்ணாமலை;

தீப ஜோதியைக் காட்டும் ஊரிலிருந்து வந்து, செய்யாறு ஜோதியை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

ஜோதியும், ஜோதியும் இணைந்தால் பெருந்ஜோதியாகத்தான் திகழப் போகிறது.

தென்பெண்ணையாற்று உபரி நீரை செய்யாற்றுடன் இணைத்தால் செய்யாறு ஆறு பாயும் பகுதிகளில் விவசாயம் செழிக்கும்; மக்கள் வளம் பெறுவாா்கள் என்று, தான் அமைச்சராக இருந்தபோது, அப்போதைய முதல்வரிடம் எடுத்துக் கூறி, தென்பெண்ணை உபரிநீா் கால்வாயை செய்யாற்றோடு இணைக்க முயற்சி எடுத்து, அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு அத்திட்டம் முதல்வா் கருணாநிதியால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அடுத்து வந்த அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அது கிடப்பில் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் செய்யாறு - தென்பெண்ணையாற்றை இணைப்பதற்கு வேட்பாளராக உள்ள ஜோதியும், நானும் இணைந்து நடவடிக்கை எடுப்போம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். ெய் செய்யாறு நகரில் பெரிய அளவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com