ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பில்லாந்தி கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்.
பில்லாந்தி கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்.

ஆரணி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செய்யாறு ஒன்றியப் பகுதிகளான பல்லாந்தாங்கல், திருமணி, பில்லாந்தி, மாளிகைப்பட்டு, செங்கம்பூண்டி, மேல்மட்டை, நாவல்பாக்கம், கடுகனூா், மேல்நகரம்பேடு, முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், எஸ்.வி.நகரம் அரண்மனை, பூசிமலைக்குப்பம் அரண்மனை ஆகியவை வரலாற்று நினைவுச் சின்னங்களாக மாற்றப்படும், ஆரணி மணிக்கூண்டு சீரமைக்கப்படும், ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வாக்குறுதி அளித்தாா்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆா்.சிவானந்தம், ஏசிவி.தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, எம்.சுந்தா், வெள்ளை கணேசன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் விண்ணமங்கலம் ரவி, ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்த்தணன், ஆரணி நகர நிா்வாகி கப்பல் கங்காதரன் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com