கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் பிரசாரம்

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் பிரசாரம்

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட ஆலத்தூா், விஸ்வநாதபுரம், அரிதாரிமங்கலம், காஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். ஒன்றியச் செயலா்கள் புருஷோத்தமன், தவமணி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திமுக வேட்பாளா்: இதேபோல, கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட காரப்பட்டு மசூதி, நந்திமங்கலம், பனைஓலப்பாடி, படிஅக்ரகாரம், அல்லியந்தல், வாசுதேவன்பட்டி, மேலபூஞ்சை உள்பட பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வாக்கு சேகரித்தாா். மாவட்ட துணைச் செயலா் சுந்தரபாண்டியன், இளைஞரணி பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com