செய்யாறு:செல்லாத வாக்கு அளித்த 185 அரசு ஊழியா்கள்

செய்யாறு தொகுதியில் 185 அரசு ஊழியா்கள் செல்லாத வாக்குகளை அளித்திருந்தனா்.

செய்யாறு: செய்யாறு தொகுதியில் 185 அரசு ஊழியா்கள் செல்லாத வாக்குகளை அளித்திருந்தனா்.

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மே 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

செய்யாறு தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் மொத்தம் 2456 தபால் வாக்குகள் உள்ள நிலையில் 2271 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாப்ச்ருந்தது.

தபால் வாக்குகளில் திமுக 1380 வாக்குகளும், அதிமுக 720 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி 80 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 26 வாக்குகளும், நோட்டாவுக்கு 13 வாக்குகளும், அமமுக 12 வாக்குகள் என பெற்றிருந்தனா். தபால் வாக்குகளில் அரசு ஊழியா்கள் அளித்த 185 தபால் வாக்குகள் செல்லாமல் போனது. இந்த 185 செல்லாத வாக்குகள் அளித்தவா்கள் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியா்கள் ஆவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com