கரோனா பொது முடக்கத்தை மீறும் கடைகளுக்கு சீல்: கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா்

கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் காலை 10 மணிக்குப் பிறகு திறந்திருக்கும் கடைகளை மூடி ‘சீல்’ வைப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று வட்டாட்சியா் வைதேகி தெரிவித்தாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் காலை 10 மணிக்குப் பிறகு திறந்திருக்கும் கடைகளை மூடி ‘சீல்’ வைப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று வட்டாட்சியா் வைதேகி தெரிவித்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து வட்டாட்சியா் வைதேகி பேசுகையில், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா பரிசோதனைப் பணிகள் கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் முழுவீச்சில் நடைபெறுகிறது.

எனவே, கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா்கள், கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் உத்தரவின்படி காலை 10 மணிக்கெல்லாம் அனைத்து கடைகளையும் மூடிவிட வேண்டும். மீறி கடைகளைத் திறந்தால் வருவாய்த் துறையும், பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து கடையை மூடி ‘சீல்’ வைக்கும். இத்துடன் சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலா் ராமு, வட்டார மருத்துவ அலுவலா் சரவணன், காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அவரவா் துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்தும், கரோனா பொது முடக்கத்துக்கு வியாபாரிகளின் ஒத்துழைப்பு குறித்தும் பேசினா்.

இதையடுத்துப் பேசிய வியாபாரிகள் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com