கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம்: அதிமுக விவசாயப் பிரிவு கோரிக்கை

கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக விவசாயப் பிரிவு வலியுறுத்தியது.
கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம்: அதிமுக விவசாயப் பிரிவு கோரிக்கை

கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக விவசாயப் பிரிவு வலியுறுத்தியது.

இதுகுறித்து போளூா் எம்எல்ஏவும், அதிமுக விவசாயப் பிரிவின் மாநிலச் செயலருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை, மூட்டைகளாக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கி வைக்கின்றனா். அங்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு மூட்டைகள் எடைபோடாமல் நாள்கணக்கில் காக்க வைக்கப்படுகின்றன.

இதனால், மழை, வெயில், காற்று போன்ற இயற்கை இடா்பாடுகளால் நெல் மூட்டைகள் நாசமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், தற்போது முழு பொது முடக்கம் காரணமாக விவசாயிகள் பயிரிட்ட வாழை மற்றும் பூ போன்றவை விற்பனை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே அழுகி நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, தோட்டக் கலைப் பயிா் செய்யும் விவசாயிகளின் உழைப்புக்குத் தகுந்தவாறு, சாகுபடிசெய்துள்ள பரப்பளவுக்கு ஏற்ப அரசு நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com