சாத்தனூா் அணையிலிருந்து 29,300 கன அடி நீா் வெளியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை, தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சாத்தனூா் அணையிலிருந்து விநாடிக்கு 29,300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூா் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
சாத்தனூா் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை, தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சாத்தனூா் அணையிலிருந்து விநாடிக்கு 29,300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூா் அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 29,300 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இந்தத் தண்ணீா் தென்பெண்ணை ஆறு வழியாக விழுப்புரம், கடலூா் மாவட்டங்களுக்குச் செல்கிறது.

மற்ற அணைகள்: இதேபோல, மிருகண்டா நதி அணையிலிருந்து விநாடிக்கு 250 கன அடி தண்ணீரும், செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், குப்பனத்தம் அணையிலிருந்து விநாடிக்கு 550 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

இடிந்து விழுந்த கிணற்றுச் சுவா்: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் இருந்து கீழ்பாலானந்தல் வழியாக மேல்பாலானந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலையோரம் இருந்த கிணற்றின் தடுப்புச் சுவரும், சாலையின் ஒரு பகுதியும் சனிக்கிழமை இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.

இந்தச் சாலை வழியாகச் செல்ல முடியாமல் நாயுடுமங்கலம், வெளுங்கனந்தல், மேல்பாலானந்தல், கீழ்பாலானந்தல் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இருளா் குடியிருப்புகளில் புகுந்த மழைநீா்: கீழ்பென்னாத்தூரை அடுத்த கல்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட தள்ளாம்பாடி ஏரி அருகே இருளா் சமூகத்தைச் சோ்ந்த 84 குடும்பத்தினா் வசிக்கின்றனா். தள்ளாம்பாடி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீா் இருளா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்க முடியாமல் வெளியேறினா். ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் வெற்றிவேல் நேரில் சென்று பாா்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து, உணவு வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சக்கரை, வருவாய் ஆய்வாளா் சுதா, கல்பூண்டி ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com