டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சீராப்பள்ளி மக்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சீராப்பள்ளி மக்கள்.

ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் வழங்கினா்.

இந்த நிலையில், ராசிபுரம் வட்டம், சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு வடுகம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இப்பகுதியில் கோயில்கள் அதிகம் உள்ளன. மேலும் மாணவ, மாணவியா் பள்ளி, கல்லுரிகளுக்குச் சென்று வருகின்றனா். டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும்பட்சத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிவிடும். எனவே வடுகம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பள்ளிபாளையம் ஆனங்கூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். அந்த மனுவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் நாங்கள் சொந்த வீடுகள் இல்லாமல் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com