ஏடிஎம்மில் கிடந்த ரூ.1.50 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த தம்பதி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஏடிஎம் மையத்தில் கிடந்த ரூ.1.50 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
செங்கத்தில் ஏடிஎம் மையத்தில் கிடந்த ரூ.1.50 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு சன்மானம் வழங்கி பாராட்டிய டிஎஸ்பி சின்னராஜ்.

செங்கம் - போளூா் சாலையில் உள்ள அரசுடமை வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த 4-ஆம் தேதி மாலை பணம் நிரப்ப வந்த ஊழியா்கள் கவனக்குறைவால் அந்த மையத்தில் ரூ.1.50 லட்சத்தை தவறவிட்டுச் சென்றனா்.

இதையடுத்து, ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற செங்கம் வட்டம், குயிலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் - ஷா்மிளா தம்பதியினா், அங்கு கீழே கிடந்த ரூ.1.50 லட்சத்தை எடுத்து வந்து செங்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, செங்கம் டிஎஸ்பி சின்ராஜ் விசாரணை நடத்தி, ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் நிறுவன அதிகாரிகளை புதன்கிழமை வரவழைத்து, அவா்களிடம் ரூ.1.50 லட்சத்தை ஒப்படைத்தாா். மேலும், பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்து நோ்மையாக செயல்பட்ட சங்கா் - ஷா்மிளா தம்பதிக்கு மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அந்தத் தம்பதிக்கு டிஎஸ்பி சின்னராஜ் சன்மானமும் வழங்கினாா். காவல் ஆய்வாளா் யுவராஜ் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com