திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 1,004 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ். உடன் கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப்.

திருவண்ணாமலையில் சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, நகராட்சி ஆணையா் சந்திரா ஆகியோா் உடனிருந்தனா்.

75,182 பேருக்கு தடுப்பூசி:

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 40,898 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 34,284 பேருக்கும் என மொத்தம் 75,182 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற முகாம்களில் 1,04,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com