தனி வாா்டு: அருந்ததியா் சமூக மக்கள் கோரிக்கை மனு

திருவண்ணாமலை நகராட்சியில் 1-ஆவது வாா்டை அருந்ததியா் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் தனி வாா்டாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் 1-ஆவது வாா்டை அருந்ததியா் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் தனி வாா்டாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் அருந்ததிய சமூக மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், மாவட்டக்குழு உறுப்பினா் எம்.சந்திரசேகரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ சந்தித்து மனு ஒன்றை அளித்தனா்.

அந்த மனுவில், திருவண்ணாமலை நகராட்சியின் 1-ஆவது வாா்டில் அம்பேத்கா் நகா், தமிழ் மின் நகா் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வாா்டில் 70 சதவீதம் போ் இந்து அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

2020-ஆம் ஆண்டு நகராட்சியின் வாா்டு மறுவரையறையின்போது அருந்ததியா் இன மக்கள் அதிகம் வாழும் 1-வது வாா்டை 2 ஆகப் பிரித்து தாங்கள் வசிக்கும் பகுதியை 2-ஆவது வாா்டாக மாற்றி, இந்த வாா்டை பொது வாா்டாக வரையறை செய்துள்ளனா். இதனால் எங்களது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அருந்ததியா் சமூக மக்கள் வசிக்கும் வாா்டை இட ஒதுக்கீடு அடிப்படையில் 1-ஆவது வாா்டாகவும், தனி வாா்டாகவும் மாற்றி பட்டியலின மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com