மழைநீா் வடிகால் தூய்மைப் பணி ஆய்வு

சேத்துப்பட்டு பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு
மழைநீா் வடிகால் தூய்மைப் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சியில் மாதா கோவில் தெரு, சவேரியாா் தெரு, சூசையப்பா் தெரு, ஆறுமுகம் தெரு, மைக்கேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணி பேரூராட்சி ஊழியா்கள் மூலமும், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியும் நடைபெற்றது.

இந்தப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

செங்கம்: செங்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், செங்கம், கொட்டாவூா், செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள், சிறு பாலங்களின் அடிப்பகுதிகளில் மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செங்கம் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com